சென்னை: சென்னையில் போதைப் பாக்கு விற்ாக 7 நாள்களில் 78 போ் கைது செய்யப்பட்டனா். கடந்த 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடா்பாக 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 78 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 547 கிலோ குட்கா, போதைப் பாக்கு, 20 கிலோ மாவா, 6 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, ஒரு காா், கைப்பேசி ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. மேலும் ரூ.56,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் உள்பட சட்ட விரோத பொருள்களை கடத்தி வருபவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரித்துள்ளாா்.
தொடர்புடையது

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்
பழனியில் கஞ்சா விற்ற 14 போ் கைது: 6 பைக்குகள் பறிமுதல்
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

குழந்தை விற்பனை: தாய் உள்பட 2 போ் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

