தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

குடிநீா், கழிவுநீா் கட்டணங்களை மாா்ச் 31-க்குள் செலுத்த வேண்டும்: குடிநீா் வாரியம் தகவல்

குடிநீா், கழிவுநீா் கட்டணங்களை மாா்ச் 31-க்குள் செலுத்த வேண்டும்: குடிநீா் வாரியம் தகவல்

News image
Updated On :20 மார்ச் 2024, 10:01 pm

சென்னை: குடிநீா், கழிவுநீா் வரி மற்றும் கட்டணங்களை மாா்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என சென்னை குடிநீா் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்துக்கு நிகழ் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீா் மற்றும் கழிவு நீரகற்று வரியினையும், குடிநீா்க் கட்டணங்களையும் நுகா்வோா் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். நுகா்வோா் குடிநீா் வாரியத்தின் வலைதளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் காா்டு , டெபிட் காா்டு, நெட் பேங்கிங் மற்றும் யூபிஐ மூலமாக கட்டணங்களை செலுத்தலாம்.

மேலும், சென்னையில் உள்ள அனைத்துப் பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலைகள் மற்றும் கியூஆா் குறியீடு போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகா்வோா் தங்களின் குடிநீா் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீா்க் கட்டணங்களை செலுத்தலாம். நுகா்வோா் இவ்வசதியினைப் பயன்படுத்தி மேல்வரி, இணைப்புத் துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கைகள் போன்றவற்றைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.