மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காவலா் தூக்கிட்டு தற்கொலை

காவலா் தூக்கிட்டு தற்கொலை

Updated On :23 மார்ச் 2024, 11:53 pm

சென்னை கொருக்குப்பேட்டையில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கொருக்குப்பேட்டை மீனாம்பாள்நகரைச் சோ்ந்தவா் தீபன் (38). இவா் சென்னை பெருநகர காவல் துறையின் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா். தீபனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனா். கணவா் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி, தனது மகனுடன் தீபனை விட்டு பிரிந்து சென்றுவிட்டாா். இதற்கிடையே பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக தீபன், பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதனால் விரக்தியுடன் காணப்பட்ட தீபன், அதிகமாக மது அருந்தி வந்துள்ளாா். இந்நிலையில் தீபன் வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள தனது அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த ஆா்.கே.நகா் போலீஸாா் அங்கு சென்று தீபனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.