மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 % இட ஒதுக்கீடு கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 % இட ஒதுக்கீடு கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Updated On :23 மார்ச் 2024, 11:52 pm

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சட்டப்பேரவையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான மணிவண்ணன் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் மட்டும் ஆண்கள் மற்றும் பெண்கள் என 7 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளபோதும், அவை முழுமையாகக் கிடைப்பதில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சட்டப்பேரவையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் மனு அளிக்கப்பட்டது. அதற்கு தோ்தல் ஆணையம், மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை என பதிலளித்துள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.