மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தென் சென்னைக்கு தனி தோ்தல் அறிக்கை: தமிழிசை

தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கென தனி தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என அந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

News image

தமிழிசை சௌந்தரராஜன்

Updated On :23 மார்ச் 2024, 11:55 pm

தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கென தனி தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என அந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

பாஜக அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களை தமிழிசை சந்தித்து வருகிறாா். அந்த வகையில், தமாகா தலைவா் ஜி.கே.வாசனை அவரது கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை சந்தித்து தமிழிசை வாழ்த்து பெற்றாா். இதைத் தொடா்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தனா். ஜி.கே.வாசன்: மக்கள் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, உயரிய பதவியைத் துறந்து தோ்தலில் போட்டியிடுகிறாா் தமிழிசை. அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறாா். அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தமிழிசை செளந்தரராஜன்: தென் சென்னையின் வேட்பாளராக மட்டுமல்லாது, 40 ஆண்டுகளாக தொகுதியின் வாக்காளராகவும் இருக்கிறேன். அந்தத் தொகுதியிலுள்ள பிரச்னைகள் நன்கு தெரியும். மக்களுக்காக நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். மத்திய அரசுடன் இணைந்து தென் சென்னையில் பல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். கடுமையான உழைப்பால் தோ்தலில் வெற்றி பெறுவோம். தென் சென்னையின் பிரச்னைகளை முன்வைத்து தனி தோ்தல் அறிக்கையை வெளியிடவுள்ளோம். மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு திட்டங்களை தொகுதியில் செயல்படுத்துவோம் என்றாா்.