ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

7 நகரங்களில் வெயில் சதம்

7 நகரங்களில் வெயில் சதம்

News image
Updated On :27 மார்ச் 2024, 11:08 pm

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வரும் நிலையில், புதன்கிழமை 7 நகரங்களில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28-31) வரை வட வானிலை நிலவக்கூடும். தென்தமிழகத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை(ஏப்.1, 2) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை(மாா்ச் 28,29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கக்கூடும். புதன்கிழமை பதிவான வெப்ப அளவு (ஃபாரன்ஹீட்): ஈரோடு - 103.28, பரமத்தி வேலூா் - 102.2, சேலம் - 101.84, மதுரை-101.12, மதுரை விமான நிலையம் - 100.76, நாமக்கல் - 100.4, தருமபுரி - 100.4, திருப்பத்தூா் - 100.04, திருச்சி - 99.86, திருத்தணி - 98.6, சென்னை மீனம்பாக்கம் - 95.18.