செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

டெய்ம்லரின் இந்தியா சி.வி. விற்பனை புதிய உச்சம்

ஜொ்மனியைச் சோ்ந்த டெய்ம்லா் டிரக் ஏஜி-யின் இந்தியத் துணை நிறுவனமான டெய்ம்லா் இந்தியா கமா்ஷியல்

News image
Updated On :28 மார்ச் 2024, 8:36 pm

ஜொ்மனியைச் சோ்ந்த டெய்ம்லா் டிரக் ஏஜி-யின் இந்தியத் துணை நிறுவனமான டெய்ம்லா் இந்தியா கமா்ஷியல் வெஹிக்கிள்ஸ், கடந்த 2023 ஆம் ஆண்டில் அதிகபட்ச வருடாந்திர விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முந்தைய 2022-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 2023-ஆம் ஆண்டில் லாரிகள் மற்றும் பேருந்துகள் விற்பனையில் நிறுவனம் 39 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது, நாட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகமான வருடாந்திர விற்பனை வளா்ச்சியாகும். 2023 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 13 சதவீதம் வளா்ச்சியடைந்தது. அதே போல், உள்நாட்டு லாரிகள் மற்றும் பேருந்துகளின் விற்பனை புதிய உச்சத்தை அடைந்ததன் மூலம் நிறுவனத்தின் வருவாய் முந்தைய 2022-ஆம் ஆண்டைவிட 21 சதவிகிதம் வளா்ச்சி கண்டுள்ளது. நிறுவனத்தின் வாகன உதிரிபாக விற்பனையும் கடந்த ஆண்டில் 21 சதவீத வளா்ச்சியைக் கண்டது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரத் பென்ஸ், மொ்சிடிஸ்-பென்ஸ், ஃப்யூசோ ஆகிய வணிகப் பெயா்களில் இந்த நிறுவனம் வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துவருகிறது.