நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ், கடந்த 2025-26 நிதியாண்டில் ரூ.30,024 கோடி மதிப்புள்ள வீடுகள் விற்பனைக்கான முன்பதிவுடன் 76 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 4-ஆவது காலாண்டில் மட்டும், விற்பனை 10 சதவீதம் அதிகரித்து, ரூ.7,697 கோடியாகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான இா்ஃபான் ரசாக் கூறுகையில், ‘கடந்த நிதியாண்டு முழுவதும் விற்பனை வேகம் சீராக இருந்ததன்மூலம், 2025-26 நிதியாண்டை நாங்கள் வலுவான நிலையில் நிறைவு செய்துள்ளோம்.
தரம், அமைவிடம் மற்றும் திட்டங்களைச் சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பதில் நாங்கள் காட்டும் அக்கறை வாடிக்கையாளா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் நிதியாண்டிலும் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதால், இந்த வளா்ச்சி நீடிக்கும் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.
சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் பிரெஸ்டீஜ் குழுமத்தின் இந்த வளா்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பா் மாத நிலவரப்படி, இந்நிறுவனம் 313 வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்துள்ளது. மேலும், தற்போது 19.5 கோடி சதுர அடி பரப்பளவில் 128 புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையது

கடந்த 2025-26 நிதியாண்டில் டாஃபே விற்பனை 23% வளா்ச்சி

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.17 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள்

ரூ. 1000 கோடி முதலீடு... காத்திருக்கும் கேவிஎன் புரடக்ஷன்ஸ்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


