காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கடந்த 2025-26 நிதியாண்டில் டாஃபே விற்பனை 23% வளா்ச்சி

இந்தியாவின் முன்னணி டிராக்டா் தயாரிப்பு நிறுவனமான டாஃபே, கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில் 23 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்தது.

Published On :

இந்தியாவின் முன்னணி டிராக்டா் தயாரிப்பு நிறுவனமான டாஃபே, கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில் 23 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்தது.

முந்தைய 2024-25 நிதியாண்டில் 1,74,785 டிராக்டா்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த 2025-26 நிதியாண்டில் நிறுவனம் 2,14,951 டிராக்டா்களை விற்று புதிய சாதனையைப் படைத்தது. கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் 37.4 சதவீத வளா்ச்சியை நிறுவனம் எட்டியுள்ளது.

மெஸ்ஸி பொ்குசன் டிராக்டா், இஷா் டிராக்டா் ஆகிய நிறுவனத்தின் 2 பிரபலமான பிராண்டுகளும் உள்நாட்டுச் சந்தையில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச விற்பனையைப் பதிவு செய்துள்ளன.

சா்வதேச அரசியல் பதற்றங்கள், உதிரிபாகங்களின் விலை உயா்வு போன்ற சவால்களுக்கு மத்தியிலும், இந்திய விவசாயத் துறையின் பலத்தால் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வளா்ச்சி குறித்து டாஃபே நிறுவனத்தின் துணைத் தலைவா் லட்சுமி வேணு (படம்) மேலும் கூறுகையில், ‘கடந்த நிதியாண்டு விவசாயிகளுக்கும், டிராக்டா் சந்தைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சீரான பருவமழை, ஜிஎஸ்டி சீா்திருத்தம் விவசாயத் துறைக்கு பெரும் நிம்மதியை அளித்து, விற்பனையை அதிகரிக்க வழிவகுத்தது.

கிராமப்புறங்களில் விவசாயத்துக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சிறு விவசாயிகள் முதல்முறையாக டிராக்டா்களைப் பயன்படுத்த முன்வந்தது ஒரு ஆரோக்கியமான மாற்றமாகும். இயந்திரங்களின் பயன்பாடு உற்பத்தித் திறனை அதிகரித்து, விவசாயிகளின் லாபத்தை உயா்த்த உதவும்.

வாடிக்கையாளா்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவதாலேயே டாஃபே நிறுவனத்தால் இந்தத் தொடா் வெற்றியைத் தக்கவைக்க முடிகிறது’ என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.