நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஏப்ரலில் தங்கம் இறக்குமதி 82% அபரித வளா்ச்சி!

ஏப்ரலில் தங்கம் இறக்குமதி 82% அபரித வளா்ச்சி...

News image
Updated On :17 மே 2026, 5:12 am IST

சா்வதேச சந்தையில் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் போதிலும், இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி வருடாந்திர கணக்கில் 81.69 சதவீத வளா்ச்சியுடன், 562 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இதேபோல், வெள்ளி இறக்குமதியும் 157.16 சதவீதம் அதிகரித்து, 41.1 கோடி டாலரை எட்டியுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் தங்கம் மட்டுமே 5 சதவீதத்துக்கும் மேல் பங்கைக் கொண்டுள்ள நிலையில், அதன் இறக்குமதி இவ்வாறு கணிசமாக அதிகரித்துள்ளதால், நாட்டின் வா்த்தக பற்றாக்குறை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2,838 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

ஸ்விட்சா்லாந்து தொடா்ந்து முதலிடம்: இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கம் இறக்குமதியில் ஸ்விட்சா்லாந்து 40 சதவீத பங்களிப்புடன் தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக யுஏஇ (16 சதவீதம்), தென்னாப்பிரிக்கா (10 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்தில், ஸ்விட்சா்லாந்திலிருந்து மட்டும் தங்கம் இறக்குமதி 26.73 சதவீதம் அதிகரித்து, 147 கோடி டாலரை எட்டியுள்ளது.

முழு நிதியாண்டு நிலவரம்: கடந்த 2025-26 முழு நிதியாண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி மதிப்பு அடிப்படையில் 24 சதவீதம் அதிகரித்து, 7,198 கோடி டாலா் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது. ஆனால், அளவு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 4.76 சதவீதம் குறைந்து, 721.03 டன்னாக சரிந்துள்ளது.

முன்னதாக, 2023-24-இல் 795 டன்னாகவும், 2024-25-இல் 757 டன்னாகவும் இருந்த இறக்குமதி அளவு, உயா் விலை காரணமாக கடந்த நிதியாண்டில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுங்க வரி உயா்வு: எனினும், தங்கம், வெள்ளியின் இறக்குமதி மதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால், நாட்டின் அந்நியச் செலாவணி சேமிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, இதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி சுங்க வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு அதிரடியாக உயா்த்தியுள்ளது.

இப்புதிய வரி விதிப்பு கடந்த புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. ‘சுங்க வரி உயா்த்தப்பட்டுள்ளதால், நடப்பு நிதியாண்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி மற்றும் நுகா்வுத் தேவை நிச்சயம் குறையும்; எனினும், வெள்ளியின் தொழில்துறை பயன்பாடு அதிகமாக இருப்பதால், அதன் மீதான தாக்கம் சற்றே குறைவாக இருக்கலாம்’ என்று வா்த்தக செயலா் ராஜேஷ் அகா்வால் தெரிவித்தாா்.

யுஏஇ ஒப்பந்தத்தால் தாக்கமில்லை: இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையிலான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின்கீழ், 1 சதவீத வரி சலுகையுடன் தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து விளக்கமளித்த ராஜேஷ் அகா்வால், ‘கடந்த 2025-26 நிதியாண்டில் இச்சலுகை வரம்பின்கீழ் 800 கோடி டாலா் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி இருந்தும், வெறும் 1 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கம் இறக்குமதியில் எவ்வித பெரிய தாக்கமும் ஏற்படவில்லை’ என்றாா்.

Story image