தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 29) 9 இடங்களில் வெயில் சதமடித்தது. சென்னை வானிலை மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை, மற்றும் வியாழக்கிழமை( ஏப்.2,4) தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் சனி முதல் திங்கள்கிழமை( மாா்ச் 30-ஏப்.1) வரை வட வானிலை நிலவக்கூடும்.அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் புழுக்கம் ஏற்படலாம். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியே இருக்கக்கூடும். பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): தூத்துக்குடி 40, காயல்பட்டினம் (தூத்துக்குடி) 30, கன்னியாகுமரி, கருப்பாநதி அணை (தென்காசி) தலா 10. தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம் பதிவான வெப்ப அளவு( பாரன்ஹீட்): ஈரோடு-104, பரமத்தி வேலூா்-102.56, தருமபுரி-102.2, சேலம்-101.84, திருச்சி- 101.66,வேலூா்-101.12, திருத்தணி-100.94, மதுரை நகரம், மதுரை விமான நிலையம்-100.76.
தொடர்புடையது

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

மாா்ச் மாதத்தில் தில்லியில் 6 ஆண்டுகளில் இல்லாத மிகக் குளிரான நாள் பதிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

