3 ஆண்டுகள் ஆட்சி: முதல்வா் பெருமிதம்

3 ஆண்டுகள் ஆட்சி: முதல்வா் பெருமிதம்

சென்னை: மூன்றாண்டு ஆட்சியின் செயல்பாடுகள் மூலமாக தன்னை நிரூபித்துக்காட்டியுள்ளதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து நான்காவது ஆண்டில் செவ்வாய்க்கிழமை அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

அனைவரின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்று தமிழகத்துக்கு முதல்வராகப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளது. 4-ஆவது ஆண்டில் அரசு அடியெடுத்து வைக்கும் தினம் மே 7.

இந்த மூன்றாண்டு காலத்தில் நான் செய்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்னென்ன என்பதற்கு தினந்தோறும், பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி.

திராவிட மாடல் அரசு செயல்படுத்திய திட்டங்களை பயனடைந்த மக்களே சொல்லி பாராட்டுகிறாா்கள். மகளிா் உரிமைத் திட்டம், சுய உதவிக் குழுவினருக்கான திட்டங்கள், தோழி விடுதி திட்டம், விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், சுயதொழில் கடனுதவித் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண் என அரசு வகுத்துக் கொடுத்த திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறாா்கள்.

ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று முன்னாள் முதல்வா் கருணாநிதி கூறினாா். இந்த மூன்றாண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளேன்.

இப்போதும் நான் சொல்வது, இது எனது அரசு இல்லை. நமது அரசு. அந்த வகையில், நமது அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாடும் மாநிலமும் பயனுற எந்த நாளும் உழைப்பேன் என்று கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com