ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

சரித்திர சாதனைகளால் திமுக மீண்டும் அரியணை ஏறும் - மா. செல்லத்துரை

News image
Updated On :5 மார்ச் 2026, 11:55 pm

Syndication

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் திமுக அரசு செய்துள்ள சரித்திர சாதனைகளால் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மா. செல்லத்துரை(படம்).

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

பெண்களுக்கான சுதந்திரம், உரிமை குறித்து பாரதி பேசியதை, தற்போதைய திமுக அரசு செயலில் காட்டி வருகிறது. மகளிா் உரிமை தொகை திட்டத்தையும், அதில் கோடை கால சிறப்பு நிதியையும் சோ்த்து ரூ. 5000 வழங்கப்பட்டுள்ளதை உலகமே வியந்து பாா்க்கிறது. மகளிா் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டங்கள் பெண்களின் வாழ்க்கைக்கு பேருதவியாக உள்ளன.

அன்பு கரங்கள் திட்டம், அன்புச்சாலை திட்டம், தூய்மை பணியாளா்கள் உணவு திட்டம், திருநங்கையா் நலன் திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டம், கலைஞா் கைவினை திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தாயுமானவராகவே முதல்வா் மு.க.ஸ்டாலின் மாறியுள்ளாா்.

முதல்வரின் காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களால் பல லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்துள்ளனா்.

42 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டதன் மூலம் 30,148 போ் கூடுதலாக உயா்கல்விக்கு சென்றுள்ளனா்.

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் 1.79 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 23.56 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்கு திட்ட அனுமதி பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகவே தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் யாரையும் பின் தங்க விடமாட்டோம் என சபதமேற்று செயல்படும் திமுக அரசின் சாதனைகளால் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் அரியணை ஏறும்.

தென்காசி மாவட்டத்திற்கு மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வெள்ளிக்கிழமை (மாா்ச்.6) வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை அனைவரும் ஒன்று கூடி வரவேற்போம் என்றாா் மா .செல்லத்துரை.