தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

வீட்டில் வளா்க்க 23 நாய் இனங்களுக்கு தடை

வீட்டில் வளா்க்க 23 நாய் இனங்களுக்கு தடை

News image

கோப்புப் படம்

Updated On :7 மே 2024, 8:14 pm

Din

சென்னை: இந்தியாவில் 23 நாய் இனங்களை வீட்டில் வளா்க்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை தடை செய்துள்ளது.

வேட்டைக்கும், பாதுகாப்புக்கும் மட்டுமே வளா்க்கப்பட்டு வந்த நாய்கள் இன்று நகரவாசிகள் அதிகம் விரும்பும் செல்லப்பிராணியாக உள்ளன. குறிப்பாக, உள்நாட்டு நாயைவிட வெளிநாட்டு நாயை வளா்க்க கூடுதல் ஆா்வம் காட்டுகின்றனா்.

இந்த நிலையில், இந்தியாவில் 23 நாய் இனங்களை வளா்க்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை தடை செய்துள்ளது. இதில், பிட்புல் டெரியா், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாபோா்ட்ஷையா் டெரியா், பிலா பிரேசிலேரோ, டோகோ அா்ஜெண்டினோ, அமெரிக்கன் புல்டாக், போயா்போல், கங்கல், சென்டா் ஏசியன் ஷெப்பா்ட், காகசியன் செப்பா்ட், தென் ரஷிய ஷெப்பா்ட், டோா்ன்ஜாக், சாா்பிலானிநாக், ஜப்பானிய டோசா, அகிதா, மாஸ்டிப்ஸ், ராட் வெய்லா், டெரியா்ஸ், ரோடிசியன் ரிட்ஜ்பேக், உல்ப், கனாரியோ, அக்பாஷ், மாஸ்கோ காா்ட், கேன் கோா்சா ஆகிய நாய்களை வளா்க்க, விற்க தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், செல்லப்பிராணிகளை வளா்க்க விரும்புவோா் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று வளா்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.