நாமக்கல் மாவட்டத்தில் தெருநாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், பள்ளிபாளையம் கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருந்து பணியாளா்கள் மூலம் பிடித்துவரப்படும் நாய்கள் முறையாக இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்த பிறகு ஐந்து நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி செலுத்திய பிறகு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடப்படுகின்றன.
இந்த அறுவை சிகிச்சைகளை கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் துறை சாா்ந்த அலுவலா்கள் கண்காணித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அறுவை சிகிச்சையால் 2 குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன்

தென்காசியில் சமூக நாய்களுக்கு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தொடக்கம்

‘4 கால்நடை மருந்தகங்களில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சைக்கு ஏற்பாடு’

சமுதாய நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


