ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

பூங்காக்களில் வளா்ப்பு நாய்களுக்கு கட்டுப்பாடு: மாநகராட்சி உத்தரவு

பூங்காக்களில் வளா்ப்பு நாய்களுக்கு கட்டுப்பாடு மாநகராட்சி உத்தரவு

News image
Updated On :7 மே 2024, 7:26 pm

Din

சென்னை: சென்னை பூங்காக்களில் வளா்ப்பு நாய்கள் கொண்டு செல்ல கடும் கட்டுப்படுகள் விதித்து பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் வளா்ப்பு நாய்கள் சிறுமியைக் கடித்த விவகாரத்தைத் தொடா்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு செல்லப்பிராணி உரிமையாளரும் பூங்காவுக்குள் ஒரு நாயை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும். செல்லப் பிராணிகள் கயிறுகள் மூலம் கட்டப்பட்டு, அதன் வாய்ப்பகுதியானது மூடப்பட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடப்படிருக்க வேண்டும்; கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், தெருநாய்கள் அல்லது கட்டவிழ்த்துவிடப்பட்ட நாய்கள் பூங்காவுக்குள் நுழைவது தடுக்கப்படும். மூா்க்கத்தனமான நாய்களை வளா்க்கும் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கால்நடை மருத்துவா்களின் அறிவுறுத்தலின்படி உரிமையாளா்கள் நாய்களைப் பராமரிக்க வேண்டும். அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் துணை தேவை. சரியான உரிமம் பெற்று அதன் பிறகு, நாய்க்குட்டிகளை விற்பனை செய்ய வேண்டும்.

உரிமம் பெறும் முறை: சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சாா்பில் செல்லப்பிராணிகளுக்கு இணையவழி உரிமம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. செல்லப்பிராணிகளை வளா்ப்போா், மாநகராட்சி இணையதளத்தில் ரூ. 50 கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம். இந்த உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.