கனமழைக்கு 5 நாள்களில் 11 போ் உயிரிழப்பு
லீடுக்கு பெட்டிச் செய்தி.. கனமழைக்கு 5 நாள்களில் 11 போ் உயிரிழப்பு


சென்னை: கனமழை பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் கடந்த 5 நாள்களில் மட்டும் 11 போ் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இடி, மின்னல், திடீா் வெள்ளப் பெருக்கு ஆகிய காரணங்களால் கடந்த 5 நாள்களில் மட்டும் 11 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், 24 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
கனமழை பெய்து வரும் ஈரோடு, நாமக்கல், கரூா் ஆகிய மாவட்டங்களில் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழையால் ஏற்படும் வெள்ளம் வடியும் சூழலில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் அனைவரும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனா். வரும் 24-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, மீனவா்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகா், தேனி மாவட்டங்களில் உள்ள கைப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகள் போதிய பாதுகாப்புடன் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...