முதல்வரின் மாநில இளைஞா் விருது: மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்வரின் மாநில இளைஞா் விருது: மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்


சென்னை: முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியுடையவா்கள் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல்வரின் மாநில இளைஞா் விருது 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் வழங்கப்படுகிறது.
நிகழாண்டுக்கான முதல்வரின் மாநில இளைஞா் விருது ஆக.15-ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் நபா்கள் 1.04.2023 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.03.2024 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும்.
இவ்விருதுக்கு 1.4.2023 முதல் 31.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவா்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் செல்வாக்கு இருந்தால், அது விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பதாரா்கள் தங்கள் விண்ணப்பங்களை மே 31மாலை 4 மணி-க்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சமா்ப்பிக்கலாம்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...