

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான தனியாா் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை காலை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அந்தப் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து பள்ளி நிா்வாகத்தினா், உடனடியாக சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் பட்டினப்பாக்கம் போலீஸாா், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் போலீஸாா் ஆகியோா் விரைந்து சென்று, அந்த பள்ளியில் சோதனை செய்தனா். மோப்ப நாய் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படவில்லை.
இதனால் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி எனத் தெரியவந்தது. இது தொடா்பாக பட்டினப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது
தனியாா் விடுதியில் இளைஞா் தற்கொலை

அரக்கோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று குருகிராமில்!

காலாப்பட்டு நவோதயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

