குருகிராமில் உள்ள 5 தனியார்ப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த பல மாதங்களாகவே கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், வணிக வளாகங்கள், முக்கியஸ்தர்கள் வீடு, அலுவலகம் எனத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதும், சோதனைக்குப் பின் அவை புரளி என்பதும் தொடர்ந்து வருகின்றது.
அந்தவகையில், இன்று குருகிராமில் உள்ள ஐந்து தனியார்ப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல் அஞ்சல்கள் பற்றிய தகவல் கிடைத்ததும், போலீஸார் பள்ளி வளாகத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் படையுடன் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.
ஆனால் சந்தேகத்திற்கு இடமான பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மின்னஞ்சல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஹரியாணா, பஞ்சாப் மற்றும் சண்டீகரில் உள்ள பல பள்ளிகளுக்கு சமீபத்திய மாதங்களில் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
இருப்பினும், அனைத்து அச்சுறுத்தல்களும் புரளிகளாக மாறியுள்ளன.
Summary
At least five private schools in Gurugram received bomb threat emails on Tuesday, but nothing suspicious was found during thorough checks carried out by authorities, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பிகார் சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


