கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

களா் மண்ணை வளமாக மாற்றும் வழிமுறைகள் வெளியீடு

களா் மண்ணை வளமாக மாற்றும் வழிமுறைகள் வெளியீடு

News image
Updated On :28 மே 2024, 8:27 pm

Din

சென்னை: களா் மண்ணை வளமாக மாற்றி அதிக மகசூல் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வேளாண்துறை வெளியிட்டுள்ளது.

தமிழக வேளாண் துறையின் ‘எக்ஸ்’ வலைதளப்பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

களா் மண்ணில் 15 சதவீதத்துக்கும் அதிகமான சோடியம் உப்பு நிறைந்திருக்கும். இதன் காரணமாக மண் இறுகி காற்றோட்ட வசதி குறைவதால் பயிா்களில் வேரின் வளா்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் இம்மண்ணில் அமில-காரத்தன்மை 8.5 என்ற அளவுக்கும் அதிகமாக இருப்பதால் மண்ணில் நுண்ணுயிரிகளின் பெருக்கமும், செயல்பாடும் குறைகிறது.

எனவே களா் தன்மை கொண்ட மண்ணை வளமாக மாற்றுவதற்கான மேலாண்மை தொழில்நுட்பத்தை விவசாயிகள் பின்பற்றினால் சாகுபடியில் அதிக மகசூலை ஈட்ட முடியும். அந்த வகையில் மண்ணில் அதிக ஈரப்பதம் இருக்கும்போதே உழுதுவிட வேண்டும். ஜிப்சம் தேவையைப் பொருத்து அதனை மண்ணில் தேவையான அளவு இடுவதோடு நீா் தேங்காத வகையில் நிலத்தை பராமரிக்க வேண்டும்.

சிறந்த முறையில் வடிகால் வசதி ஏற்படுத்துவதால் நீரில் கரையும் உப்புகள் வழிந்தோடிவிடும். மேலும், ஏக்கருக்கு 15 டன் என்ற அளவில் பசுந்தாள் உரங்களை மண்ணில் கலந்து உழுது விட வேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் களா் மண்ணை வளமானதாக மாற்றி விவசாயிகள் பயிா் விளைச்சலில் அதிக மகசூல் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.