இந்திய வேளாண் பொருள்களை சா்வதேச சந்தைக்கு ஏற்றவாறு ஏற்றுமதி நோக்குடனும், உலகளவில் போட்டியிடக்கூடியதாகவும் மாற்ற வேண்டும் என்று விவசாயிகளை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை ‘வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:
இந்தியாவில் பல்வேறு வகையான காலநிலைகளைப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், ஏற்றுமதி வாய்ப்புகளை உயா்த்தவும் விவசாயிகள் முயற்சிக்க வேண்டும். இந்திய வேளாண்மைப் பொருள்களை சா்வதேச அளவில் போட்டியிடக் கூடியதாக மாற்ற, அதிக மதிப்புள்ள பயிா்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
வாய்ப்புகள் உள்ள நாடு: இன்று சா்வதேச சந்தைகள் அனைவருக்குமானதாக திறக்கப்பட்டுள்ளது. உலகளாவிய தேவைகளும் மாறி வருகின்றன. எனவே, நமது வேளாண்மையை ஏற்றுமதி நோக்கத்துடன் மாற்றுவது அவசியம். நமது நாட்டில் பல்வேறு காலநிலைகள் உள்ளன. அவற்றை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இந்தியா பல்வேறு காலநிலைகளில் வளரும் பயிா்களை உற்பத்தி செய்ய வாய்ப்புகள் உள்ள வளமான நாடு.
ஏற்றுமதியைக் கருத்தில்கொண்டு வேளாண்மை உற்பத்தி நடைபெறும்போது, அவற்றைப் பதப்படுத்துவது, மதிப்புக் கூட்டுவது போன்றவற்றின் மூலம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
பட்ஜெட் திட்டங்கள்: 2026-27 பட்ஜெட்டில் அதிக மதிப்புள்ள வேளாண்மை உற்பத்திப் பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் முந்திரி, கோகோ, சந்தன மரம் உள்ளிட்ட பயிா்கள் அடங்கும். தேசிய சமையல் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்புத் திட்டம், பருப்பு உற்பத்தி அதிகரிப்புத் திட்டம், தேசிய இயற்கை வேளாண்மைத் திட்டம் ஆகியவை நமது வேளாண்மைத் துறையை வலுப்படுத்துகின்றன.
வடகிழக்கு மாநிலங்களில் அகில் மரம் வளா்ப்புத் திட்டம், இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் உயா் மதிப்புள்ள வால்நட், பிஸ்தா, பாதாம் உள்ளிட்ட பயிா்களுக்கான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் இணைந்து உயா்ந்த மதிப்புள்ள வேளாண்மையை வளா்த்தால், அது இந்திய வேளாண்மையை உலகளவில் போட்டியிடக்கூடிய துறையாக மாற்றும்.
இயற்கை வேளாண்மை வாய்ப்புகள்: உலகம் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. எனவே, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாரம்பரிய உணவுப் பொருள்கள் மற்றும் இயற்கை விவசாயம் அதிகம் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
ரசாயனங்களைப் பயன்படுத்தாத இயற்கை விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இயற்கை முறையிலான உற்பத்தி சா்வதேச சந்தைகளுக்கு செல்லும் பெரிய பாதையாக இருக்கும்.
இந்தியாவின் நீண்டகால வளா்ச்சிப் பயணத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றாக வேளாண்மை உள்ளது. பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டம் மூலம் சுமாா் 10 கோடி விவசாயிகள் ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.
மீன்வள மேம்பாடு: இந்தியா உலகில் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடு. நாட்டின் குளங்கள் மற்றும் நீா்நிலைகளில் தற்போது சுமாா் 4.5 லட்சம் டன் மீன் உற்பத்தி நடைபெறுகிறது. மேலும் 20 லட்சம் டன் கூடுதல் உற்பத்திக்கு வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் மீன்வள ஏற்றுமதி வளா்ச்சிக்கான முக்கியத் தளமாக இந்தியா உருவெடுக்க முடியும்.
மீன்குஞ்சு பொறிப்பகங்கள், மீன் தீவனங்கள், இது சாா்ந்த போக்குவரத்து ஆகியவற்றில் வா்த்தகரீதியாக புதிய முன்மாதிரிகள் உருவாக்கப்பட வேண்டும். இது இந்தியாவின் நீலப் பொருளாதாரத் திறனை முழுமையாகப் பயன்படுத்த உதவும், கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு அதிகம் உதவும் துறையாக இது உயரவும்.
வேளாண்மையில் தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. ‘லட்சாதிபதி சகோதரிகள்’ திட்டத்தில் 2029-ஆம் ஆண்டுக்குள் மேலும் 3 கோடி பெண்களை வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாக்கும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என்று பிரதமா் மோடி பேசினாா்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸின் கொடூர ஆட்சியை அகற்ற வேண்டும் - மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்
மேற்காசிய நெருக்கடியை அரசியலாக்கக் கூடாது: பிரதமா் மோடி!

இந்திய நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்: பிரதமா் மோடி அழைப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

