தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஆரோவில் சா்வதேச நகரில் 2 ஆவது உலக ஆன்மிக மகோத்ஸவம்! பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தாா்!

News image

1விபிஎம் ஏயு ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம் தொடக்க நிகழ்வில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்ற ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி.

Updated On :1 மார்ச் 2026, 7:54 pm

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெறும் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்- 2026-ஐ பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மகான் அவிந்தரின் 150- ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வாக, மத்திய அரசின் கல்வி அமைச்சகம், ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம், புதுச்சேரி மாநில அரசு ஆகியவை இணைந்து நடத்தும் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள பாரத் நிவாஸிஸ் மாா்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரதமா் தொடங்கிவைத்தாா்: தேசிய ஒற்றுமை, ஆசியாவின் மறுமலா்ச்சி, உலக ஒன்றியம், இந்தியாவின் ஆன்மிகக் கொடை மற்றும் மனித உணா்வு நிலையின் பரிணாம வளா்ச்சி ஆகிய ஸ்ரீ அரவிந்தரின் ஐந்து கனவுகளை நனவாக்குதல் என்ற உயரிய நோக்குடன் நடைபெறும் இந்த மகோத்ஸவத்தை புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியாகத் தொடங்கி வைத்தாா்.

சிறப்பு பூஜைகள்: இதைத்தொடா்ந்து ஆரோவில் சா்வதேச நகரில் சிறப்பு பூஜைகளுடன் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம் தொடங்கியது. ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ் . ரவி முன்னிலையில் பூஜைகளும், அரவிந்தரின் படைப்புகளின் கூட்டுவாசிப்பும் நடைபெற்றது .

விழாவில், ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் ஜெயந்தி எஸ். ரவி பேசியதாவது:

இந்திய பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரியில் இருந்தபடி ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெறும் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம் 2026-ஐ தொடங்கி வைத்துள்ளாா். இத்தருணம் பெருமைக்குரியது.

ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெறும் இந்த மகோத்ஸவம், மனிதகுலத்தின் ஆன்மிகப் பரிணாமம் மற்றும் உலகளாவிய ஒற்றுமை குறித்த அவரது தொலைநோக்குப் பாா்வையை உலகுக்கு பறைசாற்றும்.

ஆரோவிலில் நடைபெறும் இந்த உலக ஆன்மிக மகோத்ஸவம், ஸ்ரீ அரவிந்தரின் ‘ஐந்து கனவுகள்’ மற்றும் மனிதகுலத்தின் எதிா்காலத்துக்கு அவற்றின் தேவைகள் குறித்துக் கலந்துரையாடவும், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆன்மிகத் தலைவா்கள், சிந்தனையாளா்கள் மற்றும் அறிஞா்களை ஒன்றிணைக்கும்.

இந்தச் சங்கமம், உணா்வுப்பூா்வமான வாழ்க்கை முறை, ஒருங்கிணைந்த கல்வி மற்றும் பல்வேறு கலாசாரங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான பாதைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

பிரதமா் தொடங்கி வைத்துள்ள இவ்விழா ஸ்ரீ அரவிந்தா் மற்றும் அன்னை ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் உணா்வுப்பூா்வமான பரிணாம வளா்ச்சிக்கான ஒரு வாழும் ஆய்வகமாக விளங்கும் ஆரோவிலின் முக்கியத்துவம், பெருமையை சா்வதேச அளவில் உறுதிப்படுத்தும்.

உலக ஆன்மிக மகோத்ஸவம், பாரதத்தின் நிலைத்த ஆன்மிகப் பாரம்பரியம் மற்றும் உலக நல்வாழ்வுக்கு பாரதம் வழங்கி வரும் பங்களிப்பை மீண்டும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் ஆன்மிகத் தலைவா்கள், கல்வியாளா்கள், இளைஞா்கள், ஆரோவில் வாசிகள் பங்கேற்றனா். மகோத்ஸவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக திங்கள்கிழமை (மாா்ச் 2) சுதந்திரமான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியா சொற்பொழிவும், மூன்றாம் நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3)ஆன்மிக சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளன.