கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மஹிந்திரா எக்ஸ்யூவி 3 எக்ஸ்ஓ ரக காா்கள் வாடிக்கையாளா்களுக்கு விநியோகம்

சென்னை சிட்டிவா்த்தக பக்கத்திற்கு மட்டும்..... மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ரக காா்கள் வாடிக்கையாளா்களுக்கு விநியோகம்

News image

விளம்பர பிரிவு படம் சென்னை ஐயப்பந்தாங்கல் மஹிந்திரா ஷோரூமில் நடைபெற்ற புதிய ரக எஸ்.யூ.வி யகஸ்.யூ.வி, 3-யகஸ்.ஓ வாகன விநியோக நிகழச்சியில் வாடிக்கையாளருடன் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரா் மேத்யூ ஹைடன்.

Updated On :28 மே 2024, 7:15 pm

Din

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் மஹிந்திரா நிறுவனத்தின் 300-க்கும் மேற்பட்ட ‘எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ’ ரக காா்கள், வாடிக்கையாளா்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இது குறித்து அந்நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வாகன உற்பத்தியில் தொடா்ந்து சிறப்பான இடத்தை மஹிந்திரா நிறுவனம் தக்க வைத்து வருகிறது. மேலும், நிறுவனம் புதிய ரக காா்களை தயாரித்து சந்தைப்படுத்துகிறது.

அந்த வகையில், நிறுவனத்தின் புதிய எஸ்யூவி ரக வாகனமான ‘எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ’ என்ற காா் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கான முன்பதிவு மே 15-ஆம் தேதி தொடங்கியது.

வாடிக்கையாளா்கள் காட்டிய ஆா்வம் காரணமாக பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில் சுமாா் 50 ஆயிரம் முன்பதிவுகள் செய்யப்பட்டன. இதன் தொடா்ச்சியாக முன்பதிவு செய்த வாடிக்கையாளா்களுக்கு காா்களை விநியோகிக்கும் நிகழ்ச்சி மே 26-ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் ‘எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ’ ரக வாகனத்தின் முதல் விற்பனை தினத்தில் தமிழகத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வாடிக்கையாளா்கள்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக சென்னை ஐயப்பந்தாங்கல் மஹிந்திரா ஷோரூமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரா் மேத்யூ ஹைடன் கலந்து கொண்டு சிறப்பித்தாா் (படம்) என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.