கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

‘இந்தியா’ கூட்டணி கூட்டம்: ஜூன் 1-இல் தில்லி செல்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘இந்தியா’ கூட்டணி கூட்டம்: ஜூன் 1-இல் தில்லி செல்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :28 மே 2024, 7:55 pm

Din

சென்னை: தில்லியில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா். இதற்காக, அன்றைய தினம் காலை சென்னையிலிருந்து விமானம் மூலமாக தில்லி செல்லவுள்ளாா். கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, ஜூன் 2-ஆம் தேதி காலை சென்னை திரும்பவுள்ளாா்.

அறிவாலயத்தில் ஆலோசனை: மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடா்பாக, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை ஆலோசித்தாா்.

இந்த ஆலோசனையின் போது, திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணை பொதுச் செயலா் ஐ.பெரியசாமி, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் உடனிருந்தனா். வாக்கு எண்ணிக்கையின் போது, முகவா்களுக்கு அறிவுறுத்த வேண்டிய விஷயங்கள், மக்களவைத் தோ்தல் முடிவுக்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.