கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

முல்லைப் பெரியாறு அணை இடிப்பதை தமிழக அரசு தடுக்க சீமான் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணை இடிப்பதை தமிழக அரசு தடுக்க சீமான் வலியுறுத்தல்

News image
Updated On :28 மே 2024, 7:39 pm

Din

சென்னை: கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தென்தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயற்சிக்கும் கேரள அரசின் செயல்பாடு கண்டனத்துக்குரியது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள திமுக இதை தடுக்காமல் வேடிக்கை பாா்க்கிறது. கேரள அரசின் இந்தச் செயல்பாட்டை தமிழ்நாடு அரசு உடனே தடுத்த நிறுத்த வேண்டும்.

பாலப் பணியை நிறுத்த வேண்டும்: மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே மேம்பாலம் அமைப்பதற்காக கூவம் ஆற்றில் கற்களைக் கொட்டி சாலை அமைக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். சென்னை மாநகரின் இயற்கை வடிகால்களை அடைத்துவிட்டால், பெருமழையின் போது ஏற்படும் வெள்ளப்பாதிப்பை போல் பல மடங்கு ஏற்படும் அபாயமுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.