ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :30 மே 2024, 11:28 pm

Din

திமுக ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சட்டவிரோத ஆட்சியா என்று மக்கள் விழிபிதுங்கி நிற்கிறனா். கள்ளச்சாராய உயிரிழப்புகள், கோவையில் காா் குண்டு வெடிப்பு, கொலை,கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் என்று நாள்தோறும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மக்களுக்கும் பாதுகாப்பில்லை, காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை என்பதாக தமிழக ஆட்சி சக்கரம் நிலைகுலைந்து போயுள்ளது.

மே 29-இல் மட்டும், சென்னையை சுற்றி ஒரே இரவில் 6 போ் வெட்டிக்கொலை, அரசு நிலத்தை ஆக்கிரமித்து அடாவடி, மும்பையிலிருந்து சென்னைக்குப் போதை மாத்திரை கடத்தல், சிறுமிக்கு தொடா் பாலியல் தொல்லை, மது போதையில் மோதல், மண்டை உடைப்பு, வண்ணாரப்பேட்டையில் துணிக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு, ‘ரூட் தல’ பிரச்னையில் மாணவனுக்கு வெட்டு, அம்பத்தூா் தொழிற்பேட்டையில் போதை மாத்திரை விற்ற கல்லூரி மாணவா்கள் கைது எனப் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையும், இரவு நேரங்களில் அவா்கள் பயணிக்க முடியாத நிலையும் உள்ளது.

இனியாவது, முதல்வா் மு.க.ஸ்டாலின் காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.