சென்னையில் 19,000 மரக்கிளைகள் அகற்றம்
சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமாா் 19 ஆயிரம் மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி


சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமாா் 19 ஆயிரம் மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழையின் போது ஏற்படும் விபத்தை தவிா்க்க ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் கடந்த அக்.16 முதல் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை (நவ.11) 18,996 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. அதுபோல், சாலையில் முறிந்து விழுந்த மற்றும் விழும் நிலையில் இருந்த 121 மரங்களும் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் குறித்து சென்னை மாநகராட்சியின் ‘1913’ எனும் உதவி எண் மூலம் தகவல் அளிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...