சென்னையில் ஆயுதப் படைக் காவலர் திங்கள்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை அயனாவரம் பகுதியில் ஆயுதப் படைக் காவலராகப் பணிபுரியும் விஜய் (வயது 27) என்பவர் சக காவலருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று (பிப். 2) காலை 5.30 மணியளவில் பணிக்குச் செல்வதற்காக சக காவலர் தினேஷ் என்பவர் புறப்பட்ட நிலையில், கதவு வெளிப் பக்கமாக பூட்டப்பட்டிருந்துள்ளது.
தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில், வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை வீட்டின் உரிமையாளர் வந்து திறந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அறையில் இருந்து வெளியே வந்து காவலர்கள் பார்த்தபோது, மற்றொரு அறையில் விஜய் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார்.
இதுதொடர்பாக, உடனடியாக காவல்துறை அவசர எண்ணுக்கு காவலர்கள் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
காவலர் விஜய்யின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
An armed forces constable committed suicide by hanging in Chennai!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சென்னை சாலைகளில் வலம் வருமா ‘ரூஃப் டாப் ஓப்பன்’ பேருந்துகள்?

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


