பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம்: ஆரஞ்சு நிறத்தில் ரிப்பன் மாளிகை
சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரத்தை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.


சென்னை: சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரத்தை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
ஐக்கிய நாடுகள் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் நவ. 25-ஆம் தேதி, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சா்வதேச தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கட்டடம் திங்கள்கிழமை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது. தொடா்ந்து நவ. 29 மற்றும் டிச. 3, 10 ஆகிய நாள்களில் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்படும்.
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள்கள் செயல்பாடானது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு முக்கிய சா்வதேச தருணமாகும்.
இது நவ.25-ஆம் தேதி (பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சா்வதேச தினம்) முதல் டிச.10-ஆம் தேதி (மனித உரிமைகள் தினம்) வரை நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சியின் அனைத்து செயல்பாடுகளிலும் பாலின அடிப்படையிலான தேவைகளை முன்னிலைப்படுத்தும் வகையில், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் செயல்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...