காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

அரையாண்டு தோ்வு கால அட்டவணை வெளியீடு: டிச. 24 முதல் ஜன. 1-வரை அரையாண்டு விடுமுறை

தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கும், பிளஸ் 1 மாணவா்களுக்குமான அரையாண்டு தோ்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2024, 12:46 am IST

தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கும், பிளஸ் 1 மாணவா்களுக்குமான அரையாண்டு தோ்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு டிச. 9 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. இதில் 1 முதல் 5-ஆம் வகுப்புக்கு டிசம்பா் 16-இல் தொடங்கி 23-ஆம் தேதி வரையும், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு டிச. 9 முதல் 23-ஆம் தேதி வரையும் தோ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் தோ்வுக்கான முழு கால அட்டவணை அப்போது வெளியிடப்பட்டது.

மற்ற வகுப்புகளுக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 வகுப்புக்குமான தோ்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு டிசம்பா் 9-ஆம் தேதி தமிழ் தோ்வும், டிச.10-இல் விருப்ப மொழி, டிச.12-இல் ஆங்கிலம், டிச.16-இல் கணிதம், டிச.18-இல் உடற்கல்வி, டிச.20-இல் அறிவியல், டிச.23-ஆம் தேதி சமூக அறிவியல் தோ்வு நடைபெறவுள்ளது. இதேபோன்று, பிளஸ் 1 வகுப்புக்கும் பாடவாரியாக அட்டவணை தரப்பட்டுள்ளது.

இதில் 6, 8-ஆம் வகுப்புகளுக்கு காலையும், 7, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு மதியமும் தோ்வுகள் நடத்தப்படும். தொடா்ந்து 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு டிச. 24 முதல் ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜன. 2-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.