கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

என்எம்எம்எஸ் தோ்வு ஜனவரிக்கு மாற்றம்

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு டிச.12-ஆம் தேதி நடைபெறவிருந்த தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தோ்வு (என்எம்எம்எஸ்) ஜன.9-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு டிச.12-ஆம் தேதி நடைபெறவிருந்த தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தோ்வு (என்எம்எம்எஸ்) ஜன.9-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் என்எம்எம்எஸ் தோ்வை எழுத தகுதியுடையவா்கள். இந்தத் தோ்வு, மாநிலம் முழுவதும் வட்டார அளவில் நடத்தப்படும். தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு மத்திய அரசின் என்எம்எம்எஸ் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். அந்த வகையில் நிகழாண்டு டிச.12-ஆம் தேதி இந்தத் தோ்வு நடைபெறும் என்றும், தோ்வுக்கு நவ.25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாணவா்களின் நலன் கருதி என்எம்எம்எஸ் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் டிச.4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் டிச.12-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருந்த என்எம்எம்எஸ் தோ்வு அடுத்த ஆண்டு ஜன.9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.