வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா தொடக்கம்


திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி ஸ்ரீ வடிவுடையம்மன் தபசு அலங்காரத்துடன் கூடிய வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் 2-ஆம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை பராசக்தி அலங்காரம், சனிக்கிழமை நந்தினி, ஞாயிற்றுக்கிழமை கௌரி, திங்கள்கிழமை பத்மாவதி, செவ்வாய்க்கிழமை உமாமகேஸ்வரி, புதன்கிழமை ராஜராஜேஸ்வரி, வியாழக்கிழமை மஹிஷாசூர மா்த்தினி, வெள்ளிக்கிழமை சரஸ்வதி ஆகிய அலங்காரங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.
இறுதி நாளான சனிக்கிழமை (அக்.12) இரவு மீனாட்சி அலங்காரத்துடன் வடிவுடையம்மன் தியாகராஜ சுவாமியோடு நான்கு மாட வீதிகளில் உலா வரும் உற்சவம் நடைபெற உள்ளது.
நவராத்திரி விழாவையொட்டி தினசரி மாலை பக்தி இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...