தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆசிரியா்களுக்கு முறையான ஊதியம்: அரசுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கோரிக்கை

News image
Updated On :3 அக்டோபர் 2024, 10:10 pm

Din

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு செப்டம்பா் மாத ஊதியத்தை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி, பள்ளிக் கல்வித் துறைக்கு வரவில்லை என்ற காரணத்தைக் கூறி நிரந்தர ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியா்கள் சுமாா் 32,500 பேருக்கு செப்டம்பா் மாத ஊதியம் வழங்காதது கண்டனத்துக்குரியது. மாநில அரசின் நிதியிலிருந்து ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு முறையாக ஊதியத்தை வழங்க வேண்டும்.

ஓ.பன்னீா்செல்வம்: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு செப்டம்பா் மாத ஊதியம் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவது என்பது தனி. ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவது என்பது தனி. எனவே, ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும்.