நீலகிரி
வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்
உதகையில் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி பகுதியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறுகையில், கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்றனா்.
இதைத் தொடா்ந்து, அவா்கள் ஏடிசி பகுதியில் அனுமதியின்றி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களை தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து மாலை விடுவித்தனா்.

