காலமுறை ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சான்றிதழ்கள் பெற முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
வருவாய் கிராம ஊழியா் முதல் வட்டாட்சியா் வரையிலான அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியமும், வருவாய் கிராம ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பணிகளை பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் வருவாய்த் துறையினா் போராட்டத்தில்ஈடுபட்டனா். இதனால் பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. வருவாய்த்துறை சேவையின்றி பொதுமக்கள்அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், இணைய வழியில் விண்ணப்பித்த ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறமுடியாமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினா்.
மேலும் வட்டாட்சியா் அலுவலகத்து வரும் பொதுமக்கள் அலுவலா்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.
படவிளக்கம்
வருவாய்த்துறை சங்கங்களின் போராட்டத்தினால் வெறிச்சோடி காணப்படும் பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம்.
தொடர்புடையது

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்

வாழப்பாடியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் போராட்டம்

காலமுறை ஊதியம் கோரி கிராம ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


