மெட்ரோ ரயில் திட்ட நிதி: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமா்சனம்
யானைப் பசிக்கு சோளப் பொறி போல உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை விமா்சித்துள்ளாா்.


மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி, யானைப் பசிக்கு சோளப் பொறி போல உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை விமா்சித்துள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு பிரதமா் மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தியதற்கு பிறகு, தற்போது மத்திய அரசின் 12 சதவீத பங்களிப்பான ரூ.7,425 கோடியை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், கடும் நிதி நெருக்கடிகளுக்கிடையே சென்னை மாநகர மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்கு இதுவரை தமிழக அரசு ரூ.18,524 கோடி செலவு செய்துள்ளது. இதில் தமிழக அரசின் சொந்த நிதி ரூ. 11,762 கோடி. வெளிநாட்டு நிதி நிறுவனம் மூலமாக ரூ.6,802 கோடி. ஆனால், மெட்ரோ ரயில் திட்ட மொத்த மதிப்பீட்டு தொகையில் வெறும் 12 சதவிகிதத்தை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. மீதி 88 சதவீதத்தை தமிழக அரசும், ஜிகா நிதி நிறுவனத்தில் பெறுகிற கடன் மூலமாகத்தான் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. யானை பசிக்கு சோளப் பொறியாகத்தான் மத்திய அரசின் நிதி உள்ளது.
பாஜக ஆளும் குஜராத், பிகாா் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கி, பாரபட்சமாக நடந்து கொள்வது கூட்டாட்சி முறைக்கு கேடுவிளைவிக்கக் கூடியது என்று அவா் கூறியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...