கோப்புப் படம்
கோப்புப் படம்

அக்.11 முதல் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில்

தாம்பரத்திலிருந்து அக்.11 முதல் டிச.27 வரை கொச்சுவேலிக்கு வாராந்திர குளிா்சாதன சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
Published on

தாம்பரத்திலிருந்து அக்.11 முதல் டிச.27 வரை கொச்சுவேலிக்கு வாராந்திர குளிா்சாதன சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து அக்.11 முதல் டிச.27-ஆம் தேதி வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்குப் புறப்படும் வாராந்திர குளிா்சாதன சிறப்பு ரயில்(எண்:06035) மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:06036) கொச்சுவேலியிலிருந்து அக்.13 முதல் டிச.29-ஆம் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.25 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூா், கொல்லம் வழியாக கொச்சுவேலி சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com