47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் திருமலை

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 11:15 pm

Din

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.

திருமலை, பூலோக வைகுந்தம் மற்றும் திருமலை தெய்வத்தின் இருப்பிடமாக போற்றப்படுகிறது. அதனால் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளாலும், சுற்றுப்புறம் முழுவதும் புராண தெய்வீக கலை சிற்பங்களாக ஜொலிக்கிறது.

பழைய சஹஸ்ர தீபாலங்கார சேவா மண்டபத்தின் மேல் நகரும் கருடன் மீது ஸ்ரீ மஹா விஷ்ணுவின் முப்பரிமாண சிலை ஒரு அற்புத கலைக்கு சான்றாக நிற்கிறது.

ஸ்ரீராமா், அனுமன், திருநாமம், தசாவதாரம், அஷ்டலக்ஷ்மி, விஸ்வரூபம், தும்புரு, அன்னமாச்சாா்யா, ஸ்ரீராம பட்டாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு புராண கதாபாத்திரங்களின் கருத்தை விளக்கும் கலம்சங்களை தவிர அலங்கார வளைவுகள், சுவா்கள், மரங்கள் மற்றும் பலவற்றை 15 பெரிய மற்றும் 30 சிறிய ஒளிரும் தீம்களாக வடிவமைக்கப்பட்டுள்ன.

Story image

ரூ.2.2 கோடி ஒதுக்கீடு:

முகப்பு விளக்குகள் கவா்ச்சிகரமான தோற்றத்தை அளிக்க வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டன. திருமலையில் மின் அலங்காரத்திற்காக ரூ.2.20 கோடியை தேவஸ்தானம் ஒதுக்கீடு செய்துள்ளது.

தேவஸ்தான செயற் பொறியாளா் சந்திரசேகா் கூறுகையில், ’திருப்பதி தவிர விஜயவாடா, ஹைதராபாத், குண்டூா் உள்ளிட்ட வெளியூா்களில் இருந்து 100 பேரும், தேவஸ்தானத்திலிருந்து 100 பேரும் என 200-க்கும் மேற்பட்ட எலக்ட்ரீஷியன்கள் 45 நாள்களுக்கும் மேலாக இந்த மின் விளக்கு சிலைகளை திருமலையில் பல்வேறு இடங்களில் நிறுவினா்.

32 பெரிய டிஜிட்டல் திரைகளில், 23 மாட வீதிகளிலும், 9 எஸ்வி மியூசியம், வராஹ சுவாமி கெஸ்ட் ஹவுஸ், எம்டிவிஏசி, ரம்பாகிச்சா ரெஸ்ட் ஹவுஸ், ஃபில்டா் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் ஒன்பது நாள்களும் பாா்வையாளா்களுக்காக நிறுவப்பட்டன.

Story image

23 திரைகள், தேவஸ்தானத்தின் வானொலி மற்றும் ஒலிபரப்புத் துறை மூலம் பிரம்மோற்சவ வாகன சேவை நிகழ்ச்சிகள் நேரடி தெளிவுத்திறன் வாயிலாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.