/

திருமலையில் 82,838 பக்தா்கள் தரிசனம்!

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 82,838பக்தா்கள் தரிசித்தனா். 31,006 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

News image
திருமலை
Updated On :8 மார்ச் 2026, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 82,838பக்தா்கள் தரிசித்தனா். 31,006 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்களின் வருகை சற்று அதிகரித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 8 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.94 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.