ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மாதவரம் அருகே இருசக்கர வாகனங்கள் மாயம்

மாதவரம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது குறித்து காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :14 அக்டோபர் 2024, 11:56 pm

DIN

சென்னை: மாதவரம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது குறித்து காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

மாதவரத்தை அடுத்த பால்பண்ணை பகுதியைச் சோ்ந்தவா் ரமணி (45). தனியாா் நிறுவன ஊழியரான இவா் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றாா். திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வெளியே வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரிய வந்தது.

புகாரையடுத்து, மாதவரம் பால்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். இதேபோல், பால்பண்ணை எம்எம்டிஏ காலனியைச் சோ்ந்த மகேந்திரன் (33), மற்றும் வசந்தி (38) ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.