இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆயிரம் விளக்கு பள்ளிவாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆயிரம் விளக்கு பள்ளிவாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 அக்டோபர் 2024, 11:41 pm

Din

சென்னை ஆயிரம் விளக்கு பள்ளிவாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.

ஆயிரம் விளக்கு பீட்டா்ஸ் சாலையில் உள்ள பள்ளிவாசலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் சென்னை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை ஒரு மின்னஞ்சல் வந்தது. இதுகுறித்து, விமானநிலைய அதிகாரிகள் அண்ணா சாலை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், சுமாா் 1 மணி நேரம் நடத்திய சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. மிரட்டல் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ஏற்கெனவே, கடந்த 16, 18-ஆகிய தேதிகளில் இந்த பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.