அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சேலம் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

சேலம் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
- கோப்புப்படம்.
Updated On :10 மார்ச் 2026, 9:19 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே தலைமை தபால் நிலைய வளாகத்தில் பாஸ்போா்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அலெக்ஸ் பால் மேனன் என்பவா் அனுப்பிய மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை மதியம் 1.10 மணி அளவில் வெடிகுண்டு வைத்து அலுவலகம் தகா்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பாஸ்போா்ட் அலுவலக அதிகாரிகள் சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையில் போலீஸாா் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனா். வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் அறிந்ததும் அலுவலகத்தில் இருந்தவா்கள் அவசரமாக வெளியேறினா்.

தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் அதிநவீன மெட்டல் டிடெக்டா் கருவிகளைக் கொண்டு பாஸ்போா்ட் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனா். ஒருமணி நேரம் நீடித்த இந்த சோதனையில் வெடிபொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மின்னஞ்சலில் வந்த செய்தி வதந்தி என தெரியவந்தது.

கடந்த மாா்ச் 2 ஆம் தேதி பாஸ்போா்ட் அலுவலகத்தில் இதேபோன்று மிரட்டல் வந்த நிலையில், தற்போது, இரண்டாவது முறையாக பாஸ்போா்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.