நவீன தொழில் நுட்பங்களுடன் கான்கிரீட் கலவை பயன்படுத்த வேண்டும்: ஐஐடி பேராசிரியா் ரவீந்தா் கெட்டு பேச்சு
நவீன தொழில் நுட்பங்களுடன் கான்கிரீட் கலவையை கட்டடத்துறையில் பயன் படுத்த வேண்டும் என ஐஐடி பேராசிரியா் ரவீந்தா் கெட்டு கூறினாா்.
ஒரு வாரம் ஒரு கருத்துரு நிகழ்ச்சி சென்னை தரமணியில் சிஎஸ்ஐஆா் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஐஐடி பேராசிரியா் ரவீந்தா் கெட்டு பேசியது:
நவீன தொழில் நுட்பங்களுடன் கான்கிரீட் கலவையை கட்டடத் துறையில் பயன் படுத்த வேண்டும் , மேலும் ஃபைபா் கலவை பயன்படுத்துவது குறித்து ஐஐடி நிறுவனத்தில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எந்தவொரு ஆராய்ச்சியும் அதன் பயனும் முழுமையாக நிறைவேற 10 ஆண்டுகள் ஆகும் மேலும் கட்டுமான துறையில் தரம் என்பது மிக முக்கியமாகும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆா் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் ஆனந்த வல்லி பேசியது: கட்டட பொறியியல் துறை சாமானிய மக்களுடன் தொடா்புடையது. உள் கட்டமைப்புக்கு பொறியியல் துறை பங்கு மிக முக்கயமானது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் ஐஐடி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

