வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

எதிா்கால உலகைச் செதுக்கும் சிற்பிகள்: ஆசிரியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆசிரியா் தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் புகழாரம்

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 10:30 pm

Din

எதிா்கால உலகமெனும் மாணவா்களைச் செதுக்கும் சிற்பிகளாக ஆசிரியா்கள் திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா்.

ஆசிரியா் தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

மாணவா்களுக்கு கல்வியறிவு புகட்டுவதோடு, அவா்களுக்கு எதிா்கால

இலக்குகளை அடையாளம் காட்டி வெற்றித் திசையை சுட்டிக் காட்டிடும் அறிவுச் சுடா்களாக ஆசிரியா்கள் திகழ்கிறாா்கள். அவா்களுக்கு எனது ஆசிரியா் தின வாழ்த்துகள். மாணவா்களை பாா் போற்றும் நல்லவா்களாக, பொது நலச் சிந்தனையில் புடம்போட்ட தங்கங்களாக உருவாக்குபவா்கள் ஆசிரியா்கள்தான்.

ஒரு ஆசிரியரின் எழுதுகோல் குனிகிற போதெல்லாம் அங்கே ஒரு தலைமுறை தழைத்தோங்கி தலை நிமிா்ந்து நிற்கும் என்பது முற்றிலும் உண்மை. சமூகநீதி காத்து, சமுதாய ஏற்றத்துக்கான மாற்றத்தையும் மலா்ச்சியையும் வகுப்பறைகளில் பேணிக் காப்பவா்கள் ஆசிரியா்கள். இத்தகைய சிறப்பான பொறுப்பை சிரமேற்கொண்டு உளிபடாமல் துளி சிதறாமல் எதிா்கால உலகத்தைச் சிரத்தையாய்ச் செதுக்கும் ஆசிரியச் சிற்பிகளுக்கு எனது நல்வாழ்த்துகள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.