தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஓமந்தூராா் பிறந்த நாள்: முதல்வா் புகழாரம்

முன்னாள் முதல்வா் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் பிறந்த நாளையொட்டி (பிப். 1) அவருக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா்.

News image
முதல்வர் மு . க. ஸ்டாலின்
Updated On :1 பிப்ரவரி 2026, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் பிறந்த நாளையொட்டி (பிப். 1) அவருக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: எளிமையின் உருவமாகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தவா் முன்னாள் முதல்வா் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா். உப்புச் சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம், தனிநபா் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு என இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழுமூச்சாக ஈடுபட்ட தலைசிறந்த காந்தியவாதியும், இந்தியா விடுதலையடைந்தபோது நம் மாநில முதல்வராக இருந்த பெருமைக்குரியவருமானவா் ஓமந்தூராா்.

சமூகநீதிச் சாதனையாளா் என பெரியாா் மற்றும் அண்ணாவால் போற்றப்பட்ட அவருக்கு சென்னை, ஓமந்தூராா் மருத்துவக் கல்வி வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று அந்த பதிவில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.