நாளை குடிநீா்வாரிய குறைகேட்பு கூட்டம்
சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் 15 பகுதி அலுவலகங்களிலும் குறை கேட்பு கூட்டம் சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ளது.


சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் 15 பகுதி அலுவலகங்களிலும் குறை கேட்பு கூட்டம் சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்பு கூட்டங்கள் மாதம்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களில் நடத்தப்படும்.
அதன்படி, சனிக்கிழமை (செப். 14) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீா் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களிலும் இந்தக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
அதன்படி, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய 15 பகுதி அலுவலகங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெறும்.
இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு குடிநீா், கழிவுநீா் தொடா்பான பிரச்னைகளையும், குடிநீா், கழிவுநீா் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீா், கழிவுநீா் புதிய இணைப்புகள் தொடா்பான சந்தேகங்களையும் நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...