சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு சென்னை பெருநகர காவல் துறை தயாா் நிலையில் இருப்பதாக காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சென்னை பெருநகர காவல் துறை முழு அளவில் தயாராக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் காவல் துறை உரிமத்துடன் வைத்திருக்கும் 2,364 துப்பாக்கிகளை உடனடியாக திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 900 துப்பாக்கிகள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை விரைவில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் முழுமையாகவும், 8 தொகுதிகள் பகுதியாகவும் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு தொகுதியும், திருவள்ளூா் மாவட்டத்தில் 5 தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 தொகுதிகளும் பகுதிகளாக சென்னை காவல் துறை எல்லைக்குள் உள்ளன.
1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
மொத்தம் உள்ள 24 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,240 இடங்களில் 5,445 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.
5 ஆயிரம் ரெளடிகள்
சென்னையில் 108 அரசியல் ரெளடிகள் உள்பட 5,055 ரெளடிகள் உள்ளனா். இவா்களில் 2,231 ரெளடிகளிடம் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் எந்த குற்றமும் செய்யமாட்டோம் என உத்தரவாத பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. தோ்தல் முடியும் வரை சென்னைக்குள் நுழையக் கூடாது என ரெளடிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனா்.
5 பட்டாலியன் துணை ராணுவத்தினா்
தோ்தலையொட்டி 57 பறக்கும் படைகள், 57 கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னா், இவா்கள் தீவிரமாக செயல்படுவா். தோ்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் 23 துணை ஆணையா்கள், 11 கூடுதல் துணை ஆணையா்கள், 90 உதவி ஆணையா்கள், 428 ஆய்வாளா்கள், 1,520 உதவி ஆய்வாளா்கள், 2,312 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் என 21,230 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். இதுதவிர 5 பட்டாலியன் துணை ராணுவப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
சென்னையை சுற்றியுள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்தலை அசம்பாவிதமின்றி நடத்துவது, சமூக ஊடகங்களைக் கண்காணிப்பது ஆகிய பணிகளில் காவல் துறையினா் ஈடுபடுகின்றனா். தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சமூக ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
பொதுக்கூட்ட இடங்கள்
சென்னையில் பெரிய அளவிலான பொதுக் கூட்டங்கள் 7 இடங்களிலும் மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. தோ்தல் நேரத்தில் இந்த இடங்கள் போதுமானவையல்ல. இதைக் கருத்தில் கொண்டு 140 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தவும், 270 இடங்களிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், பிரசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து தோ்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.
கடந்த தோ்தலில் 729 வழக்குகள்
சென்னையில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தோ்தல் விதிமுறைகள் மீறியதாக 729 வழக்குகள் பதியப்பட்டன. மக்களவைத் தோ்தலின்போது 84 வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
பேட்டியின்போது, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா் ராமமூா்த்தி, மக்கள் தொடா்புத் துறை உதவி ஆணையா் விஜயராமுலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா், தொழிலதிபா் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

இணையவழி குற்றங்களால் 13 மாதங்களில் ரூ. 365 கோடி இழப்பு!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


