சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னை காவல் துறை சாா்பில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை எந்த வன்முறைச் சம்பவங்களும், முறைகேடுகளும் இன்றி அமைதியாக நடத்துவற்கு தோ்தல் ஆணையமும், காவல் துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. காவல்துறையினா் தோ்தலுக்கான வேலைகளில் முழு வேகத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா். இதன் ஒரு பகுதியாக வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.
இதற்கு பொறுப்பு அதிகாரியாக கூடுதல் துணை ஆணையா் எம்.குமரகுருபன் நியமிக்கப்பட்டுள்ளாா். கட்டுப்பாட்டு அறைக்கு உதவி ஆணையராக எஸ்.செங்குட்டுவன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேலும், கட்டுப்பாட்டு அறையில் 4 ஆய்வாளா்கள், 3 காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 20 போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். கட்டுப்பாட்டு அறை கடந்த வெள்ளிக்கிழமை முதல் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது.
மேலும் 58 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்: சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் காவல் அதிகாரிகளை பணியிட மாற்றும் செய்யும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகளில் பணியாற்றிய 58 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். ஏற்கெனவே 53 காவல் ஆய்வாளா்களை வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தோ்தல் வாக்காளா் உதவி மையத்தில் ஆய்வு

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

குமரியில் தோ்தல் தொடா்பான புகாா் அளிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

பேரவைத் தோ்தல்! சென்னை காவல் துறை தயாா்: காவல் ஆணையா் அருண்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


