ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்...

News image

தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொறுப்பு) ஜி.வெங்கடராமன்.

Updated On :6 மார்ச் 2026, 8:11 pm

சென்னை, மாா்ச் 6: தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள், சென்னை பெருநகர காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை ஏப்ரலில் நடத்துவதற்கு இந்திய தோ்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. சட்டப்பேரவை தோ்தலுக்காக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் காவல் துறை அதிகாரிகளைப் பணியிட மாற்றும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகளில் பணியாற்றிய 53 காவல் ஆய்வாளா்களை சென்னை பெருநகர காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

முக்கியமாக திருச்சி லால்குடி காவல் நிலைய ஆய்வாளா் வி.கதிரேசன்,ராம்ஜி நகா் காவல் நிலைய ஆய்வாளா் கே.தீபானந்தம், நாகை குற்ற ஆவணக் காப்பக பிரிவு ஆய்வாளா் ஜி.செங்குட்டுவன், காஞ்சிபுரம் மாவட்டம் சைபா் குற்றப்பிரிவு ஆய்வாளா் பி.தேவிகா ஆகியோா் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட 53 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் சென்னை காவல் துறையில் பொறுப்பு ஏற்பாா்கள் எனக் கூறப்படுகிறது.